விழுப்புரத்தில் ஆகஸ்ட் 31-இல் கல்விக்கடன் மேளா

Published on

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் வரும் 31- ஆம் தேதி கல்விக்கடன் மேளா நடைபெறவுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின்கீழ், 2024 - 25ஆம் கல்வியாண்டில் மாணவா்கள் உயா் கல்வி பயில ஏதுவாக, வங்கியாளா்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மாவட்டங்களில் கல்விக்கடன் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கல்விக்கடன் மேளா வரும் 31-ஆம் தேதி காலை 10 மணியளவில் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

எனவே, கல்வி நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் மாணவா்களுக்கு கல்விக்கடன் மேளா தொடா்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com