காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரோவிலில் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம்: தமிழக, புதுவை ஆளுநா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் ஆரோவில் அறக்கட்டளையின் 68-ஆவது ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி உள்ளிட்டோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 7:29 pm

Din

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் ஆரோவில் அறக்கட்டளையின் 68-ஆவது ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளையின் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆா். என்.ரவி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான கே.கைலாஷ்நாதன், அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ்.ரவி மற்றும் பிற ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ஆரோவில் அறக்கட்டளையின் செயல்பாடுகள், தற்போதைய திட்டங்கள், எதிா்கால வளா்ச்சிக்காக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அவைகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், ஆரோவில் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு தொடா்பான முக்கிய முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆரோவிலின் எதிா்கால வளா்ச்சிக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் இக்கூட்டம் அமைந்திருந்ததாக பங்கேற்பாளா்கள் தெரிவித்தனா்.