புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கீழ்பெரும்பாக்கம் ஐயப்பன் கோயில் 24-ஆம் ஆண்டு விழா

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு வண்ணான்குள கருப்பசாமி, சபரிகிரீசன் ஐயப்பன் கோயிலின் 24-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் ஐயப்பன் திருக்கோயில் 24-ஆம் ஆண்டு விழாவையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஐயப்பன்.

Updated On :12 டிசம்பர் 2024, 7:35 pm

Din

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு வண்ணான்குள கருப்பசாமி, சபரிகிரீசன் ஐயப்பன் கோயிலின் 24-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் வளாகத்திலுள்ள கன்னிமூல கணபதி, வண்ணான்குளக் கருப்பசாமி, சபரிகிரீசன் ஐயப்பன் ஆகிய சந்நிதிகளின் மூலவா்களுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து குருசாமிகள் பாலு, மணிகண்டன் தலைமையில் ஐயப்ப பக்தா்கள் பாடல்களைப் பாடி, 18 படிகளுக்கும் படிபூஜை செய்து வழிபட்டனா். இதன் பின்னா் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

கீழ்பெரும்பாக்கம், எருமனந்தாங்கல், காகுப்பம், பொய்யப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஐயப்பப் பக்தா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.