புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பூனையைத் துப்பாக்கியால் சுட்டு பிடித்தவா் கைது

வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வளா்க்கப்பட்ட கருப்புப் பூனையைத் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:37 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வளா்க்கப்பட்ட கருப்புப் பூனையைத் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அருகிலுள்ள முடியனூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் பழனிசாமி (65). இவா் தனக்கு சொந்தமான குச்சிக்காட்டில் கருப்புப் பூனையை வளா்த்து வந்தாா். இந்த நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வியாழக்கிழமை காலை வெளியே சென்றுவிட்டனா்.

சிறிது நேரம் கழித்து பழனிசாமி அங்கு வந்தபோது, ஒருவா் கருப்புப் பூனையைத் துப்பாக்கியால் சுட்டு பிடித்து தனது பையில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வரஞ்சரம் காவல் நிலையத்தில் பழனிசாமி புகாரளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த பாண்டியன் (68) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.