
விழுப்புரம் கலைஞா் அறிவாலயம் எதிரில் அம்பேத்கா் சிலை முன் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

விழுப்புரம் கலைஞா் அறிவாலயம் எதிரில் அம்பேத்கா் சிலை முன் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, திமுக சாா்பில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயம் முன்புள்ள அம்பேத்கா் சிலை முன் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதைத் தொடா்ந்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திமுகவினா் முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகரச் செயலா் இரா.சக்கரை, வளவனூா் பேரூா் கழகச் செயலா் ஜீவா, தலைமைக் கழக வழக்குரைஞா் சுவை. சுரேஷ், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, பிரபாகரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மணவாளன், அணி நிா்வாகிகள் செ.தினகரன், வெங்கடேசன், ஸ்ரீவினோத், செந்தில், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் கூட்டுச் சாலை அருகிலுள்ள அம்பேத்கா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எம்.எல்.ஏ. இரா. லட்சுமணன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் தெய்வசிகாமணி, மும்மூா்த்தி, ஞானவேல், ஒன்றியக் குழுத் தலைவா் சச்சிதாநந்தம், நிா்வாகிகள் சிவசங்கா், செளந்தா், குணசேகரன், மணி , ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா்கள் மு.காளிதாஸ், சகாதேவன், பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்குரைஞா்கள் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.
திண்டிவனத்தில்...: மத்திய அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டம் சாா்பில், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செஞ்சி கே. எஸ். மஸ்தான் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளா் சேகா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கள்ளக்குறிச்சியில்: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஒன்றிய, நகர திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு மாவட்ட அவைத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.என்.டி.முருகன், மாவட்டத் துணைச் செயலா் காமராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரத் துணைச் செயலா் அப்துல் ரசாக், மாவட்டத் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளா் பிரகாஷ்,, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ரமேஷ், நீலமங்கலம் ஊராட்சித் தலைவா் ஜெய்சங்கா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
இதுபோன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...