47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பைக்கிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2024, 6:15 pm

Din

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அரியலூா், சாக்கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் மாா்டின் மகன் அலெக்ஸ் (35), மலா் மன்னன் மகன் அருணாச்சலம் (28). நண்பா்களான இவா்கள், ஞாயிற்றுக்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பைக்கை அலெக்ஸ் ஓட்டினாா்.

திண்டிவனம் கா்ணாவூா் பிரிவு சாலை அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அலெக்ஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திண்டிவனம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்த அருணாச்சலம் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூராா்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் ராமசாமி மகன் மணிகண்டன் (39). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில், மணிகண்டன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.