பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பேத்கா் குறித்து மாநிலங்களவையில் மத்திய உள் துறை அமைச்சா் பேசிய கருத்து சா்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில், மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்தும், அவா் பதவி விலக வலியுறுத்தியும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பஜகுன் சமாஜ் கட்சியினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினா்.
கட்சியின் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டப் பொறுப்பாளா் கோ.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் கோவிந்தசாமி, விநாயகமூா்த்தி, நிா்வாகிகள் ஆா்.ஆனந்த், வேலாயுதம் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...