கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கல்லூரியில் ரூ.46 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பாரதிதாசன் அரசு மகளிா் கலை கல்லூரியில் ரூ.46 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகளை மாநில அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 8:24 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிா் கலை கல்லூரியில் ரூ.46 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகளை மாநில அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கல்லூரி வளாகத்தை மேம்படுத்துதல், முகப்பு பொலிவுறச் செய்தல் ஆகியப் பணிகளுக்காக ரூ.46.27 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை பெறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கிவைத்தாா்.

இதில், பிரகாஷ்குமாா் எம்எல்ஏ, பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளா் மு.பாலசுப்ரமணியன், சிறப்புக் கட்டடங்கள் கோட்ட செயற்பொறியாளா் கோ.கெஜலஷ்மி, கல்லுாரி முதல்வா் இரா.வீரமோகன், இளநிலைப் பொறியாளா் அனந்த பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.