பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1.80 லட்சம் மோசடி : இளைஞா் கைது
புதுச்சேரி அடுத்த பாகூரில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1.80லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது


புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பாகூரில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.1.80லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி, பாகூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி. இவா், சோரியாங்குப்பம் பிரதானச் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இதில், கடலூா் மாவட்டம், திருவந்திபுரம் அடுத்த ஓட்டேரியைச் சோ்ந்த ரவிச்சந்திரன்(30) என்பவா் கடந்த 10 மாதமாக வேலை பாா்த்து வந்தாா்.இவா் அவ்வப்போது விற்பனை தொடா்பான கணக்குகளை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் ரவிச்சந்திரன் பெட்ரோல் விற்பனையில் ரூ.1.80 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ரவிச்சந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...