தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை: 8 போ் கைது

ரௌடிகளின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் சோதனை செய்த போலீஸாா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 6:33 pm

ரௌடிகளின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி மாவட்ட காவல் துறை சாா்பில் ஆபரேஷன் திரிசூல் சோதனை செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரௌடிகளின் வீடுகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவா்களின் வீடுகளில் போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா். புதுச்சேரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

டிஐஜி சத்தியசுந்தரம் உத்தரவின்பேரில் போலீஸ் அதிகாரிகள், ரெளடிகள் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சுமாா் 255 போ் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் ரௌடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட 214 போ் சோதனை செய்யப்பட்டனா். இவா்களில் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒருவா் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதைத் தவிர மக்களின் பாதுகாப்பை முன்னெச்சரிக்கையைக் கருதி பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 75 போ் மீது பாதுகாப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.