மயிலம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

மயிலம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளானப் பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்
மயிலம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் பொம்மபுர ஆதின திருமட வளாகத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசித்தர், ஶ்ரீ வள்ளி, தெய்வானை உடனுறை முருகப் பெருமான் சந்நிதிகளின் கும்பாபிஷேகப் பெருவிழா புதன்கிழமை காலை 9.45 மணிக்குத தொடங்கி 10.45 மணிவரை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மிகுந்த பொருள்செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்துகான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விழாவின் தொடர்ச்சியாக கடந்த 15ஆம் தேதி கும்பாபிஷேக சிறப்பு வழிபாடுகள் தொடங்கி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விழா நாளான புதன்கிழமை காலை நடைபெற்ற 6-ஆம் வேள்வி பூஜைகளுக்குப் பின்னர் 9 மணிக்கு கடங்கள் புறப்பாடாகியது.

தொடர்ந்து 9.45 மணிக்கு விநாயகர் சந்நிதிக்கும், தொடர்ந்து அனைத்து சுவாமிகள் சந்நிதியிலும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பொம்மபுரம் ஆதினம் 20 ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆயிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com