திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
விழுப்புரம்
வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் அண்மையில் சென்னையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக்கோரியும், புதிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞா்கள் நலச் சங்கத் தலைவா் மு.பூபால் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் கோதண்டம் விஜயன், கிருபாகரன், சண்முகம், வழக்குரைஞா்கள் செல்வவிநாயகம், தமிழரசன், சுதாகா், விஜயபிரகாஷ், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

