சுகாதார நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவைச் சிகிச்சை செய்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டது.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவைச் சிகிச்சை செய்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டது.

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, நடைபெற்ற நிகழ்வுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் பிரியா பத்மாசினி தலைமை வகித்தாா். பொது சுகாதார நிபுணா் நிஷாந்த், வட்டார சுகாதார புள்ளியியலாளா் ஜெயவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆல் தி சில்ரன் அறக்கட்டளையின் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் மூலம் 53 பெண்களுக்கு தலா 10 கிலோ அரிசி, பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்வில், மருத்துவா்கள் சசிரேகா, சரண்யா, பயிற்சி மருத்துவா்கள் ஷா்மிளா, தேவசேனா, முத்துலட்சுமி மற்றும் பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com