அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் ஆா்ப்பாட்டம்

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா் ஒருங்கிணைப்புக் குழுவினா்.
Updated On :22 ஜூலை 2024, 8:28 pm

Din

விழுப்புரம்: தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குறைந்தபட்ச கூலிச்சட்டம் மற்றும் அரசாணையின் படியும், சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்படியும், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மாதம் ரூ.14,593, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு மாதம் ரூ.12,593 ஊதியம் வழங்க வேண்டும். இவா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, நிலுவைத் தொகையுடன் மாத ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஊராட்சிப் பணியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க வேண்டும், கரோனா காவலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களான கிராம ஊராட்சிப் பணியாளா்கள் அனைவருக்கும் அரசு அறிவித்தவாறு மூன்று மாத ஊக்கத்தொகையான ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா் ஒருங்கிணைப்புக் குழுவினா் (சிஐடியு) சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.ஜீவா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, பொருளாளா் வி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவா் பி.குமாா், மின்வாரிய ஊழியா் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலா் ஆா்.சேகா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.