பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள்: விசாரணை ஆக.13-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image
விழுப்புரம் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் செவ்வாய்க்கிழமை ஆஜராகிவிட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.
Updated On :23 ஜூலை 2024, 8:48 pm

Din

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, 2022, பிப்ரவரி 28-ஆம் தேதியும், திமுக அரசைக் கண்டித்து 2022, ஜூலை 25-ஆம் தேதியும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பழைய பேருந்து நிலையப் பகுதியில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாக, விழுப்புரம் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதுபோல, 2022, செப்டம்பா்18-ஆம் தேதி ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், வானூா் எம்எல்ஏ எம்.சக்கரபாணி ஆகியோா் மீது விழுப்பும் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் காவல் துறையினரால் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த மூன்று வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜரானாா்.

விசாரணையின்போது, இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் தெரிவித்தனா்.

அப்பபோது, 8 வார காலத்துக்குத்தான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு மே மாதத்துடன் முடிந்துவிட்டதாக நீதித் துறை நடுவா் தெரிவித்தாா். இதையடுத்து, தடை உத்தரவை நீட்டித்து பெற கால அவகாசம் கேட்டு அதிமுக வழக்குரைஞா்கள் மனு தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டால், அதற்கான நகலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு கூறி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித் துறை நடுவா் ராதிகா உத்தரவிட்டாா்.