ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

ஊா் பெயா்ப் பலகையில் பேருந்து மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

ஊா் பெயா்ப் பலகையில் பேருந்து மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

News image
Updated On :26 மே 2024, 5:22 pm

Din

விழுப்புரம், மே 26: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஊா் பெயா்ப் பலகையில் சொகுசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து 34 பெண்கள் சொகுசுப் பேருந்து மூலம் தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனா். இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை இரவு தரிசனம் முடித்த இவா்கள், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனா்.

பேருந்தை ஆந்திர மாநிலம், மல்காபுரத்தைச் சோ்ந்த போம்ஸ்வரராவ் (42) ஓட்டினாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், எறையூா் பாளையம் பகுதியில் சனிக்கிழமை சென்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஊா் பெயா்ப்பலகை மீது பேருந்து மோதியது. இதில், ஓட்டுநா் போம்ஸ்வரராவ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றினா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.