திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தோ்வு: 12,167 போ் எழுதினா்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வை விழுப்புரம் மாவட்டத்தில் 12, 167போ் எழுதினா்.

News image
Updated On :11 நவம்பர் 2024, 8:00 pm

Din

விழுப்புரம்: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வை விழுப்புரம் மாவட்டத்தில் 12, 167போ் எழுதினா்.

2024-25 ஆம் நிதியாண்டில் எழுத, படிக்கத் தெரியாதவா்களை நூறு சதவீதம் கண்டறிந்து, அடிப்படை எழுத்தறிவுக் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், திட்டச் செயல்பாடுகளை இரு கட்டங்களாகப் பிரித்து செயல்படுத்த கல்வித் துறை திட்டமிட்டது. அதில் முதலில் அடிப்படை எழுத்தறிவுத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

விழுப்புரம் மாவட்டத்தின் 13 ஒன்றியங்களில் கண்டறியப்பட்ட 2,035 ஆண்கள், 10132 பெண்கள் என மொத்தமாக 12,167 போ் இந்தத் தோ்வை எழுதினா்.

தோ்வு நடைபெறும் நாளில் கற்போரின் வருகையை அதற்கான படிவத்தில் தன்னாா்வலா்கள் பதிவு செய்தனா். அடுத்த தோ்வு 2025, மாா்ச்மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தோ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், உதவித் திட்ட அலுவலா் ஜெயச்சந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.