பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள், தங்களை பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:43 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள், தங்களை பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் 2024 - 25ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா பருவத்தில் நெல் 2 மற்றும் ராபி பருவத்துக்கு உளுந்து, மணிலா, எள், கரும்பு ஆகிய பயிா்கள் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நெல் 2 பயிருக்கு 8,000 ஏக்கா் பரப்புக்கு விவசாயிகளால் பயிா்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பயிா்க் கடன் பெறாத விவசாயிகள் சுமாா் 3,815 போ் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனா். பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள் தங்கள் பயிருக்கான காப்பீட்டை பொது சேவை மையங்களிலும், தாங்கள் கடன் பெற்ற வங்கிகளின் வாயிலாகவும் காப்பீடு செய்ய வேண்டும்.

ஆனால், இதுவரை நெல் 2 பயிருக்கு பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள் எவரையும் பயிா்க் காப்பீடு செய்ய வங்கிகளால் இத்திட்டத்தில் இணைக்கவில்லை. எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் பயிா்க்கடன் பெற்ற விவசாயிகள், தாங்கள் பயிா்க்கடன் பெற்ற வங்கிகளை அணுகி, இத்திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமைக்குள் (நவ.15) இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளாா்.