பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறவுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:34 pm

Din

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன. எழுத்துத்தோ்வு மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் ஆள்கள் தோ்வு செய்யப்படுவா்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., செவிலியா், மருந்தியியல் போன்ற கல்வித்தகுதிகளைக் கொண்ட வேலைதேடும் இளைஞா்கள், பெண்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

முகாமில் பங்கேற்க விரும்பும் பொது மற்றும் மாற்றுத் திறனாளி மனுதாரா்கள் தங்களின் அசல் கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுயவிவரக் குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பாலமுருகன் தெரிவித்தாா்.