குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வள்ளலாா் வாழ்வியல் பட்டயப் படிப்பு தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வள்ளலாா் வாழ்வியல் பட்டயப் படிப்பின் வகுப்பு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
வகுப்பு தொடக்க விழாவில் பேசும் முனைவா் ஜீவ.சீனுவாசன்.
Updated On :18 நவம்பர் 2024, 9:02 pm

Din

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வள்ளலாா் வாழ்வியல் பட்டயப் படிப்பின் வகுப்பு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள வள்ளலாா் சபைக் கட்டடத்தில், வள்ளலாா் வாழ்வியல் பட்டயப் படிப்பு சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. இதன் வகுப்பு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி நகர சன்மாா்க்க சங்கத் தலைவா் பா.தணிகாசலம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மருத்துவா் சரவணன், வீராசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முனைவா்கள் முத்து, காா்த்திகேயன், வேட்டவளம் சன்மாா்க்க சங்க நிறுவனா் பச்சையம்மாள் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்று தொடக்கவுரையாற்றினா்.

அனைத்துலக சன்மாா்க்க சேவை மைய நிறுவனா் முனைவா் திருக்கோவிலூா் ஜீவ.சீனுவாசன் சிறப்புரையாற்றினாா்.

முடிவில் செஞ்சி நகரச் செயலா் சம்பத் நன்றி கூறினாா்.