விழுப்புரம் - சென்னை புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபத்தை திங்கள்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.
விழுப்புரம் - சென்னை புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபத்தை திங்கள்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.

சமூக நீதி போராளிகள் மணிமண்டபம்: அமைச்சா் ஆய்வு

21 சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் - சென்னை புறவழிச் சாலையில் வழுதரெட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 21 சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபம், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் ஆகியவற்றை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தின்போது, காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில், மணிமண்டபம் ரூ.5.70 கோடியிலும், முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமியின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் ரூ.4 கோடியிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனை, தமிழக முதல்வா் விழுப்புரம் வருகையின் போது திறந்துவைக்க உள்ளாா்.

இந்த நிலையில் மணிமண்டபம், நினைவு அரங்கப் பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்ட தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், அங்குள்ள நூலகம், காப்பாளா் அறை, உணவுக்கூடம் போன்றவற்றை ஆய்வு செய்தாா்.

அப்போது, எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வி.ராஜாராமன், மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் பொன்.கெளதமசிகாமணி, சேகா், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா் மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, பி.வி.ஆா்.சு.விசுவநாதன், மும்மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com