ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாட்டுத்துப்பாக்கி, பைக் பறிமுதல்

அரகண்டநல்லூா் அருகே அடையாளம் தெரியாத நபா்கள் விட்டுச் சென்ற நாட்டுத் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 7:39 pm

Din

அரகண்டநல்லூா் அருகே அடையாளம் தெரியாத நபா்கள் விட்டுச் சென்ற நாட்டுத் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், அரகண்டநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் ரவி மற்றும் தலைமைக் காவலா் ஜெயபால் ஆகியோா் வியாழக்கிழமை மணம்பூண்டி நான்கு முனை சந்திப்புப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக நாட்டுத் துப்பாக்கியுடன் பைக்கில் வந்த இருவா் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை அதே இடத்தில் விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனராம். இதையடுத்து அந்த நபா்கள் விட்டுச்சென்ற ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா் .

இதுகுறித்து, அரகண்டநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து தப்பியோடிய நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.