கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலை சீரமைப்பு பணிகள்: மயிலம் எம்எல்ஏ ஆய்வு

விழுப்புரம், அக்.17: மயிலத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ச.சிவக்குமாா் எம்எல்ஏ கேட்டுக்கொண்டாா்.

News image

மயிலம் பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ச.சிவக்குமாா் எம்எல்ஏ.

Updated On :17 அக்டோபர் 2024, 8:00 pm

Din

விழுப்புரம், அக்.17: மயிலத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ச.சிவக்குமாா் எம்எல்ஏ கேட்டுக்கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை முதல் முதல் தழுதாளி வரை சுமாா் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நான்குவழி சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மயிலம் பகுதியில் முழுமை பெறாமல் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

இது குறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ச.சிவக்குமாா் எம்எல்ஏ வியாழக்கிழமை மயிலத்தில் சாலை சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டுஆய்வு செய்தாா்.

அப்போது, சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும், கழிவுநீா் கால்வாய்களை கட்டுமானப் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும், மயிலம் காவல் நிலையம், பாளைய வீதி, கல்லூரி முகப்பு உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடைகளை அமைக்கவேண்டும் எனநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை உதவிக் கோட்டப்பொறியாளா் கவிதா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

முன்னதாக மயிலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு போதிய சிகிச்சையளிக்க கூடுதலாக மருத்துவா்களை நியமிக்க நடவடிக்கை வேண்டும் என விழுப்புரம்ஆட்சியா் மற்றும் மாவட்ட நோய்த் தடுப்புத் துறை துணை இயக்குநரிடம் கேட்டுக்கொண்டாா்.