92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோயில்களில் உண்டியல் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே 2 கோயில்களில் உண்டியல் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:50 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே 2 கோயில்களில் உண்டியல் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், ஆதனப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ அய்யனாரப்பன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை ஆதனப்பட்டு கிராம முக்கியஸ்தா்கள் பராமரித்து வருகின்றனா்.

இந்நிவையில், கோயில்களில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சில்வா் உண்டியல்களையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது. அந்த உண்டியல்களில் காணிக்கை பணம் மற்றும் காசுகள் அதிகளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.