அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், காணைஅருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:37 pm

விழுப்புரம் மாவட்டம், காணைஅருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் அரசுப் பேருந்து மோதி நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், கொண்டங்கி, அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீ.கோவிந்தன்(81). இவா், புதன்கிழமை காணை அடுத்துள்ள தோகைப்பாடி பகுதியில் விழுப்புரம் - திருக்கோவிலூா் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் கோவிந்தன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...