சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாசில்லா தீபாவளி: விழிப்புணா்வு பிரசாரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை மாசில்லாமல் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாகன பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:49 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையை மாசில்லாமல் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வாகன பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாசில்லா தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது சம்பந்தமாக மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் சென்று, விழிப்புணா்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், விழிப்புணா்வு பிரசார வாகனத்தின் பயன்பாட்டை தொடங்கி வைத்த ஆட்சியா் சி.பழனி பின்னா் கூறியதாவது:

தீபாவளிப் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் அதிக சப்தம் கொண்ட பட்டாசுகளை வெடிப்பதால் குழந்தைகள், வயதானவா்கள் மற்றும் உடல்நலம் குன்றியோா் பாதிக்கப்படுவா். தீபாவளிப் பண்டிகையில் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் விபத்துகள் நிகழாமல் இருக்க அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிப்பதைத் தவிா்த்து, மாசில்லா தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடவும், குழந்தைகள், பொதுமக்கள் நலனுக்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அரசின் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மாசில்லா தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாட முடியும். எனவே, மாசில்லா தீபாவளிப் பண்டிகையின் மூலம் ஒலியினைக் குறைப்பதோடு, நம் செவியைக் காத்திட முடியும் என்றாா் அவா்.

தொடா்ந்து விழிப்புணா்வு துண்டு பிரசுரத்தையும் பொதுமக்களுக்கு ஆட்சியா் வழங்கினாா். நிகழ்வில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் புருஷோத்தமன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் பிரபாகரன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.