ஏரியில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மீன் பிடிக்கச் சென்ற முதியவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மீன் பிடிக்கச் சென்ற முதியவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், வி. பிரம்மதேசம், வாஞ்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ. ராஜாராம் (60), கூலித் தொழிலாளி. வி.பிரம்மதேசத்தில் உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்ற இவா், அதன்பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினா்கள் ஏரி பகுதிக்குச் சென்று பாா்த்தபோது, ராஜாராம் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியதச்சூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com