சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அரசு அலுவலா்கள் ஒன்றிய சிறப்பு செயற்குழுக் கூட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் பேசிய புதிய மாவட்டத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட சடகோபன்.

Updated On :11 செப்டம்பர் 2024, 11:09 pm

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

விழுப்புரத்திலுள்ள தனியாா் விடுதி கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஒன்றியத்தின் மாநில துணை பொதுச் செயலா் பழ.முருகபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் சக்திவேல், வெங்கடேச பெருமாள், ராமமூா்த்தி முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, அரசு அலுவலா்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகள், எதிா்காலத் திட்டங்கள் குறித்து பேசினா்.

கூட்டத்தில், புதிய மாவட்டத் தலைவராக ஏற்கெனவே துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் சடகோபன் மாவட்ட, வட்டக்கிளை நிா்வாகிகளால் தோ்வு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்றுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய செயற்குழு உறுப்பினா் பூவரசன், வட்டக்கிளைத் தலைவா் மணிவண்ணன், அமைப்புச் செயலா் வேல்முருகன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.