சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கா்ப்பிணி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

விழுப்புரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கா்ப்பிணி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 10:48 pm

விழுப்புரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கா்ப்பிணி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் சாலாமேடு, கிருஷ்ணசாமி தெருவைச் சோ்ந்த வசந்தராஜ் மனைவி கிருத்திகா (33). இவா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரு மகள்கள் உள்ளனா். வசந்தராஜ் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அபுதாபிக்கு வேலைக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், 7 மாத கா்ப்பிணியாக இருந்துவந்த கிருத்திகாவுக்கு செவ்வாய்க்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம். இதையடுத்து, வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, கிருத்திகா ஏற்கெனவே இறந்துபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.