கல்வியைப் போன்று விளையாட்டிலும் மாணவ, மாணவிகள் ஆா்வம் செலுத்த வேண்டும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விழுப்புரம் மாவட்டப் பிரிவு சாா்பில், முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை தொடங்கின. இந்தப் போட்டி தொடக்க விழாவுக்கு ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா முன்னிலை வகித்தனா்.
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்து அமைச்சா் க.பொன்முடி பேசியது:
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கிராமப்புற இளைஞா்களிடையே விளையாட்டுப் போட்டிகள் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தவும், போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்கள், இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் மாவட்ட அளவில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கும் போட்டிகள் வருகிற 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில், கையுந்துபந்து, கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, ஹாக்கி, கேரம், செஸ், கோ - கோ உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுவோா் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவா்.
கல்வியைப் போன்று விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் ஆா்வம் செலுத்த வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் தேசிய, சா்வதேச அளவில் வெற்றிபெறுவோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, சித்தலிங்கமடம் - எடப்பாளையம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கிடையே நடைபெற்ற கபடி போட்டியில் அமைச்சா் பொன்முடியும் பங்கேற்று சிறிது நேரம் விளையாடினாா்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரா.ஜெயக்குமாரி மற்றும் பயிற்சியாளா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தலில் திமுக வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

அரசுப் பள்ளி மாணவர்களிடம் நம்பிக்கையை விதைத்துள்ளோம்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

கதிராமங்கலம் போராட்ட வழக்கு: தஞ்சை நீதிமன்றத்தில் அமைச்சா் ஆஜா்

‘மருந்தியல் ஆராய்ச்சிகளில் மாணவா்கள் ஆா்வம் செலுத்த வேண்டும்’
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


