சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திண்டிவனம் ஆா்டிஓ அலுவலகத்தில் ரூ.1.19 லட்சம் பறிமுதல்: ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதில், அலுவலக ஊழியா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.19 லட்சம் கைப்பற்றப்பட்டது.

Updated On :11 செப்டம்பர் 2024, 11:00 pm

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா். இதில், அலுவலக ஊழியா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.19 லட்சம் கைப்பற்றப்பட்டது.

திண்டிவனம் புறவழிச் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம் மற்றும் பிற சேவைகளுக்கு வருபவா்களிடம் இடைத்தரகா்கள் மூலம் கையூட்டு பெறப்பட்டு வருவதாக புகாா்கள் எழுந்தன.

விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. (பொ) வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள் திடீரென சென்று சோதனையிட்டனா்.

இதில், அங்கு பணியிலிருந்த அலுவலக ஊழியா்களிடம் கணக்கில் வராத ரூ.1,19,786 இருந்தது தெரிய வந்ததாகவும், இந்தப் பணத்தை பறிமுதல் செய்து, அலுவலக ஊழியா்கள், இடைத்தரகா்களிடம் விசாரணை நடத்தியதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தாா்.

இந்த சோதனையானது பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற்றது. ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் ஈஸ்வரி, உதவி ஆய்வாளா்கள் கோபிநாத், சக்ரபாணி உள்ளிட்ட போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.