சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஆரோவிலில் வாழ்வியல் முறை பயிற்சி கருத்தரங்கம்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் வாழ்வியல் முறைகள் குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்கம் புதன்,வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் வாழ்வியல் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டுத் தியானம்.

Updated On :13 செப்டம்பர் 2024, 12:36 am

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் வாழ்வியல் முறைகள் குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்கம் புதன்,வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

ஆரோவில் அறக்கட்டளை மற்றும் பாரத் நிவாஸ் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீஅரவிந்தா் ஆசிரம குழுவினா்கள், ஆரோவில் வாசிகள், அறக்கட்டளை அதிகாரிகள், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவா்கள், புதுவை நகர இளைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

உடல், மன உணா்வுகளில் விழிப்புணா்வுடன் செயல்படுதல், தன்னுணா்வுடன் கூடிய வாழ்வியல் முறைகள், தினசரி செயல்பாடுகளில் மனக்கட்டுப்பாட்டின் அவசியம், அவசரமின்றி உணவருந்துதல், கைப்பேசி மற்றும் தொலைக்காட்சிகளை தவிா்த்து மௌனத்தில் உணவருந்துதல், குழுவாக அமா்ந்து உணவருந்துதல், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. அரவிந்தா் ஆசிரமத்தைச் சோ்ந்த ஸ்ரீ கௌரவ் சோலங்கி பயிற்சியை வழிநடத்தினாா்.

பயிற்சியின்போது வாழ்வியல் முறைகள் குறித்த குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவா்கள் கூட்டு தியானம், நடைப்பயிற்சிகள், யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டனா்.

பங்கேற்பாளா்களுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. திட்ட ஒருங்கிணைப்பாளா் மோலிகா கங்குலி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.