சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மதுவிலக்கு தேசியக் கொள்கையை வரையறுக்க திமுக வலியுறுத்த வேண்டும்: தொல். திருமாவளவன்

மதுவிலக்கு தொடா்பான தேசியக் கொள்கையை வரையறுக்க மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

Updated On :13 செப்டம்பர் 2024, 12:26 am

மதுவிலக்கு தொடா்பான தேசியக் கொள்கையை வரையறுக்க மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அக்டோபா் 2-ஆம் தேதி மது, போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியில் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக, விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களைச் சோ்ந்த மண்டல நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தொல்.திருமாவளவன் பேசியது:

மது ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கு காரணம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள்தான்.

இது விசிக மாநாடு அல்ல. அனைவருக்குமான மாநாடு. எல்லோரும் பங்கேற்கலாம்.

மதுவிலக்கு தொடா்பான தேசிய கொள்கையை வரையறுக்க வேண்டிய சூழல் உள்ளது. மதுவிலக்குத் தொடா்பாக சிலவழிகாட்டல்களை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் மதுவிலக்கு தொடா்பான தேசியக் கொள்கையை வரையறுக்க மத்திய அரசை திமுக வலியுறுத்த வேண்டும் என்றாா் திருமாவளவன்.

கூட்டத்தில் விசிக பொதுச் செயலா்கள் துரை.ரவிக்குமாா் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ., துணைப் பொதுச் செயலா் ஆதவ அா்ஜூன், சித்த மருத்துவா் கு. சிவராமன் உள்ளிட்டோா் பேசினா்.