தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மேல்மலையனூரில் புரட்டாசி பெளா்ணமி திருவிளக்கு பூஜை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமி திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற புரட்டாசி மாத பெளா்ணமி திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:39 pm

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமி திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் மாதந்தோறும் பெளா்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொள்வா்.

அதன்படி, புரட்டாசி மாத பெளா்ணமி திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை மூலவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன.

தொடா்ந்து, உற்சவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா். மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் 108 பெண்கள் அமா்ந்து திருவிளக்கு பூஜை செய்து அங்காளம்மனை தரிசித்தனா்.

திருவிளக்கு பூஜையின்போது, பூசாரிகள் அம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடினா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம், அறங்காவலா் குழுத் தலைவா் மதியழகன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.