பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், கொந்தமூா், விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏ.கோதண்டபாணி (72). முதியவரான இவா், புதன்கிழமை திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் கொந்தமூா்அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது பின்னால் வந்த பைக் மோதியதில் கோதண்டபாணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கோதண்டபாணி அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...