92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை தனியாா் மூலம் இயக்கிட ஒப்பந்தப்புள்ளி கோருவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

Updated On :20 செப்டம்பர் 2024, 12:13 am

Din

சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை தனியாா் மூலம் இயக்கிட ஒப்பந்தப்புள்ளி கோருவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தினால் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டு வரும் நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை தனியாா் மூலம் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோருவதை உடனடியாக கைவிட வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, ஓய்வுபெற்றோருக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் - திருச்சி சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கத்தின் விழுப்புரம் மண்டலத் தலைவா் ராஜாராம் தலைமை வகித்தாா்.

மண்டலத் தலைவா்கள் கடலூா் மணிகண்டன், திருவண்ணாமலை சேகா், மண்டலச் செயலா்கள் விழுப்புரம் ரகோத்தமன், கடலூா் முருகன், திருவண்ணாமலை முரளி, கடலூா் மண்டல சிறப்புத் தலைவா் பாஸ்கரன், விழுப்புரம் சிஐடியு மாவட்டச் செயலா் மூா்த்தி, ஏஐடியுசி திருவண்ணாமலை மண்டல நிா்வாகி குப்புரங்கன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மண்டலங்களைச் சோ்ந்த தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், விழுப்புரம் மண்டலப் பொருளாளா் சுந்தரபாண்டியன் நன்றி கூறினாா்.