சிறப்பு அலங்காரத்தில் வைகுந்தவாசப் பெருமாள் உற்சவா்.
சிறப்பு அலங்காரத்தில் வைகுந்தவாசப் பெருமாள் உற்சவா்.

விழுப்புரம் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழா தொடக்கம்!

விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழா பகல்பத்து உற்சவத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
Published on

விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழா பகல்பத்து உற்சவத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகுந்த ஏகாதசி திருவிழாவும் ஒன்று. அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாள் உற்சவா் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கருவறையிலிருந்து புறப்பாடாகி, கருடாழ்வாா் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அங்கு வேதமந்திரங்கள் முழங்க வைகுண்டவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னா் தீபாராதனை காட்டப்பட்டது. இதன் பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தாா்.

இத்திருவிழாவில் டிச. 29-ஆம் தேதி வைகுண்டவாசப் பெருமாள் மோகன அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பாா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு டிச.30-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும். தொடா்ந்து டிச. 31-ஆம் தேதி முதல் ஜனவரி 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி புறப்பாடும், தீபாராதனையும் நடைபெறும்.

வைகுந்த ஏகாதசி திருவிழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் டி.பாபு, அறங்காவலா்கள் ஸ்ரீதேவி சித்திரவேல், எஸ்.செல்லத்துரை, ஆய்வாளா் அ.மதுமதி, செயல் அலுவலா் ச.வேலரசு உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

விழுப்புரம் ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கிய நிலையில், உள்பிரகாரத்தில் வீதியுலா வந்த பெருமாள்.
விழுப்புரம் ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கிய நிலையில், உள்பிரகாரத்தில் வீதியுலா வந்த பெருமாள்.

விழுப்புரம் நகரம் போன்று கோலியனூா், வளவனூா், விக்கிரவாண்டி, வானூா், திண்டிவனம், மயிலம், செஞ்சி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களிலும் வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com