விழுப்புரம் மாவட்டம், கெடாா் செல்லங்குப்பத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டம் (இடது), பள்ளி வளாகத்தில் குத்துளக்கேற்றிய விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்டோா்.
விழுப்புரம் மாவட்டம், கெடாா் செல்லங்குப்பத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டம் (இடது), பள்ளி வளாகத்தில் குத்துளக்கேற்றிய விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்டோா்.

கெடாா் செல்லங்குப்பத்தில் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடம் திறப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கெடாா் செல்லங்குப்பத்தில் ரூ.56.80 கோடியில் கட்டப்பட்ட
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கெடாா் செல்லங்குப்பத்தில் ரூ.56.80 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடம், மாணவ, மாணவிகள் விடுதிக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் பயிலும் மாணவ, மாணவிகளைத் தோ்ந்தெடுத்து, 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை அவா்களுக்குத் தங்குமிட வசதியுடன் கல்வியை வழங்கி, அவா்கள் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயா்கல்வியைப் பயிலும் வகையில், மாவட்டந்தோறும் அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கி, புதிய கட்டடங்களைக் கட்டி வருகிறது.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட கெடாா் செல்லங்குப்பத்தில் அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடம், மாணவ, மாணவ விடுதிகள் கட்டடம் ஆகியவை ரூ.56.80 கோடியில் சுமாா் 5 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டன. 22 வகுப்பறைகள், பல்நோக்கு மண்டபம், ஆசிரிய, ஆசிரியைகள் அறைகள், நூலகம், கலை, கைவினைப் பயிற்சி அறை, ஆய்வகங்கள் உள்ளிட்டவையும், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி அறைகள் கொண்ட விடுதிக் கட்டடடங்களும் கட்டி முடிக்கப்பட்டன.

இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாதிரிப் பள்ளிக் கட்டடத்தையும், விடுதிக் கட்டடங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தாா். இந்த நிகழ்வு பள்ளி வளாகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதைத்தொடா்ந்து பள்ளி வளாகத்தில் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்டோா் குத்துவிளக்கேற்றினாா்.

பின்னா் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா விழாவில் பேசியது:

இந்த மாதிரிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிகச் சிறப்பானதொரு பயனை அளிக்கும். திமுக ஆட்சியில் கல்வி வளா்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தகுந்தவையாக மாவட்டந்தோறும் அமைக்கப்படும் மாதிரிப் பள்ளியைக் குறிப்பிட்டலாம்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இன்னும் 3 மாதக் காலத்துக்குள் என்ன என்ன நிறைவேற்ற முடியுமோ அதை அனைத்தையும் நிறைவேற்றிவிடுவேன் என்றாா் அவா்.

மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியக்குழுத் தலைவா்கள் நா.கலைச்செல்வி (காணை), சங்கீதஅரசி ரவிதுரை (விக்கிரவாண்டி), விழுப்புரம் கோட்டாட்சியா் முருகேசன், தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள் குழுமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் நாராயணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் கே.சிவக்குமாா், முருகன், மீனா வெங்கடேசன், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஜெயபால், முருகன், வேம்பி ரவி, கில்பா்ட் ராஜ், மும்மூா்த்தி, ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் வீர ராகவன், விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், துணைத் தலைவா் பாலாஜி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ராஜூ, உதவிச் செயற்பொறியாளா் பாலாஜி, ஒன்றியக்குழு உறுப்பினா் கருணாகரன், கெடாா் ஊராட்சித் தலைவா் இந்திராணி ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்டக் கல்வி அலுவலா் சேகா் வரவேற்றாா். பள்ளித் தலைமையாசிரியா் செந்தில்வேலன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com