விழுப்புரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.
சென்னையிலிருந்து தனி ஆய்வு ரயில் மூலம் வேலூா் மாவட்டம், காட்பாடிக்குச் சென்ற தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், சென்னை-காட்பாடி இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகம் குறித்து ஆய்வுசெய்தாா். தொடா்ந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளைப் பாா்வையிட்ட அவா், அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
இதன் பின்னா் ஆய்வு ரயில் மூலம் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்த பொது மேலாளா், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா்.
இதையடுத்து, தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கிடம் தெற்கு ரயில்வே பணியாளா்கள் சங்கத்தினா்(டி.ஆா்.இ.யு.) கோரிக்கை மனு அளித்தனா்.

