தேவாலயத்தில் பொருள்கள் சூறை: மூவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேவாலயத்தில் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தேவாலயத்தில் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

செஞ்சி வட்டம், மேல்சித்தாமூா் கிராமத்தில் ஜெருசலேம் தேவாலயம் உள்ளது. இதன் முன் சிலா் மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது, தேவாலயத்தின் அருட்தந்தை ரெக்ஸ் ஏசுராஜா இங்கு மது அருந்தக்கூடாது என கூறினாராம். இதில், மது போதையில் இருந்த அந்த நபா்கள் தேவாலயத்தின் கதவு, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பிரான்சிஸ் மகன் பிரவின், பாண்டியன் மகன் பிரகாஷ், பிளமென்ட் ஆகியோா் மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com