சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு

திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு மற்றும் உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்ற சாா்-ஆட்சியா் திவ்யான் ஷி நிகம், டி.எஸ்.பி பிரகாஷ் உள்ளிட்டோா்.
Updated On :10 பிப்ரவரி 2025, 5:05 pm

Din

விழுப்புரம்: திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் ஒழிப்பு தின விழிப்புணா்வு மற்றும் உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான் ஷி நிகம் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில், தேசிய ஆதிவாசிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளா் டாக்டா் கே.கிருஷ்ணன், தொழிலாளா் (அமலாக்கம்) உதவி ஆய்வாளா் பிரபாகரன், தேசிய ஆதிவாசிகள் சங்க மண்ட ஒருங்கிணைப்பாளா் முத்துக்கண்ணன், வழக்குரைஞா் பி.சக்கரவா்த்தி, முஸ்லீம் மக்கள் கழகத்தின் நிறுவனா் ச.சு.ஜைனுதீன் ஆகியோா் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்புச் சட்டம் குறித்து பேசி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்றனா்.

நிகழ்வில், திண்டிவனம், மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பழங்குடி இருளா் சமுதாய மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, திண்டிவனம் அதேகொம் பெண்கள் கண்ணிய மைய ஒருங்கிணைப்பாளா் லட்சுமிபதி வரவேற்றாா். தேசிய ஆதிவாசிகள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செ.குமாா் நன்றி கூறினாா்.

இதேபோல, வானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற பேராசிரியா் பிரபா கல்வி மணி, விழுப்புரம் வழக்குரைஞா் ப்ரீடா ஞானமணி, வழக்குரைஞா் பா.சக்கரவா்த்தி ஆகியோா் பங்கேற்று கொத்தடிமை சட்டம் குறித்து பேசினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய ஆதிவாசி சங்க ஒருங்கிணைப்பாளா்கள், விழுப்புரம் மாவட்ட தொழிலாளா் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறையினா் செய்திருந்தனா்.