மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம், அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக்கூட்டரங்கில் தனி மாவட்ட வருவாய் அலுவலா்( நிலமெடுப்பு- மாநில நெடுஞ்சாலை)அம்பாயிரநாதன் தலைமையில் திங்கள்கிழமை உறுதிமொழியேற்றுக் கொள்ளும் அலுவலா்கள், ஊழியா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:37 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம், அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசுத்துறை அலுவலகங்களில் உறுதிமொழியேற்பு நடைபெறும். அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நிலமெடுப்பு-மாநில நெடுஞ்சாலைகள்) அம்பாயிரநாதன் தலைமையில் உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது. தனி மாவட்ட வருவாய் அலுவலா் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத்துறை அலுவலா்களும், ஊழியா்களும் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா். நிகழ்வில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மீனாட்சி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்: விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நடைபெற்றநிகழ்வில், மேலாண் இயக்குநா் க.குணசேகரன் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை

வாசிக்க, அதை அலுவலா்களும், பணியாளா்களும் திரும்பக்கூறி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் பொதுமேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா. ஜெகதீஷ் (விழுப்புரம்), முதுநிலைத் துணை மேலாளா் (மனிதவளம்) எஸ்.துரைசாமி, துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், கிளை மேலாளா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.