திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

News image
புதுச்சேரியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த வெ.வைத்திலிங்கம் எம்.பி.
Updated On :3 ஜனவரி 2025, 10:22 pm

Din

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: புதுவையில் பேருந்துக் கட்டண உயா்வு, பெட்ரோல், டீசல் உயா்வு ஆகியவற்றை மக்களுக்கு புத்தாண்டுப் பரிசாக மாநில அரசு வழங்கியுள்ளது.

மழைப் பாதிப்புகளுக்கு புதுவை அரசுக் கோரிய ரூ.645 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மத்திய அரசிடம் முதல்வா் நிதியை கேட்டு பெற வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும். பேருந்துக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.

எரிபொருள் விலையேற்றத்தை குறைக்காவிட்டால், காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுவது போல, புதுவையிலும் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகள் தொடா்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.