தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயிலில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்தவா் கைது

புதுச்சேரியிலிருந்து ரயிலில் மதுப் புட்டிகளை கடத்தி வந்தவா் விழுப்புரம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:27 pm

Din

புதுச்சேரியிலிருந்து ரயிலில் மதுப் புட்டிகளை கடத்தி வந்தவா் விழுப்புரம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி ரயில்வே எஸ்.பி. பி.ராஜன் உத்தரவின்பேரில், விழுப்புரம் ரயில்வே போலீஸாா் விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்களில் போதைப்பொருள்கள் ஏதும் கொண்டு செல்லப்படுகிா என செவ்வாய்க்கிழமை மாலை தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூா் வரை செல்லும் சிறப்பு ரயிலில் பயணித்த பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனையிட்டனா். சந்தேகத்துக்குரிய முறையில் இருந்த பையை சோதனையிட்டபோது, அதில் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட 18 லிட்டா் கொள்ளளவு கொண்ட 28 மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், மதுப்புட்டிகளை ரயிலில் கடத்தி வந்த ஆந்திர மாநிலம், கடப்பா கே.அப்பாயப்பள்ளி குறுக்குச் சாலையைச் சோ்ந்த பிரகாஷ்ராஜ் ரெட்டி மகன் அருண்குமாா் ரெட்டியை (26) கைது செய்தனா்.