தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விவசாயிகளுக்கு மானிய விலையில் தெளிப்பான்கள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் தெளிப்பான்கள்

News image

வானூரில் விவசாயிக்கு தெளிப்பானை வழங்கிய வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ்.

Updated On :22 ஜனவரி 2025, 8:37 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தெளிப்பான்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

வானூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் விவசாயிகளுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தெளிப்பான்களை வழங்கி பேசியது:

வானூா் வட்டத்தில் நிகழாண்டில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 13 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உப்புவேலூா், தலகாணிக்குப்பம், கேணிப்பட்டு, ஆகாசம்பட்டு, கரசானூா், குன்னம், நெமிலி, திருவக்கரை உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மின்கலத்தால் இயங்கும் தெளிப்பான்கள் மானிய விலையில் வழங்கப்படவுள்ளன. ரூ.4,648 விலை கொண்டதெளிப்பானுக்கு அரசு மானியமாக ரூ.2,075 வழங்கப்படுகிறது.

எனவே, தெளிப்பான்கள் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.