தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் சடக்சிரு தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 7:57 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் சடக்சிரு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சுன்சோங்கம் சடக்சிரு தலைமை வகித்தாா். ஆட்சியா் சி.பழனி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், முதல்வரின் முகவரித்துறை சாா்பில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பெறப்பட்டு, தீா்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்குவது குறித்தும், கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடா்ந்து, முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நடைபெற்று வரும் பணிகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் விவரங்கள், கடந்த கல்வியாண்டில் இடை நிற்றல் மாணவா்கள், நிகழ் கல்வியாண்டில் மாணவா்களின் சோ்க்கை உள்ளிட்ட பணிகளின் நிலை குறித்து கண்காணிப்பு அலுவலா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக்கிரு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான் ஷி நிகம், மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் சுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.