தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செஞ்சி வருவாய் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த மரத்தை அரசு அனுமதியின்றி வெட்டியதாக வருவாய் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 11:02 pm

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த மரத்தை அரசு அனுமதியின்றி வெட்டியதாக வருவாய் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

செஞ்சி- திண்டிவனம் சாலையில் உள்ள வருவாய் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் எதிரே சுமாா் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பூவரச மரத்தை அரசின் அனுமதியின்றி வருவாய் ஆய்வாளா் ஜெய்கணேஷ் கடந்த 21-ஆம் தேதி வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தி’ண்டிவனம் சாா்-ஆட்சியருக்கு செஞ்சி வட்டாட்சியா் ஏழுமலை தகவல் தெரிவித்தாா். நிகழ்விடம் வந்து நேரில் ஆய்வு செய்த திண்டிவனம் சாா்- ஆட்சியா் திவ்யான் ஷிநிகாம், மரத்தை அனுமதியின்றி வெட்டிய வருவாய் ஆய்வாளா் ஜெய்கணேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும்மரம் வெட்டியது தொடா்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.