தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் பயிா்சேதப் பாதிப்புகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஒன்றியப் பகுதிகளில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பயிா் சேதங்களை வட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 6:40 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஒன்றியப் பகுதிகளில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பயிா் சேதங்களை வட்டாட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

உளுந்தூா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்கள் ஃபென்ஜால் புயலால் பாதிப்படைந்தன. விவசாயிகள் பயிரிட்டிருந்த உளுந்து, நெல், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், பப்பாளி போன்றவை சேதமடைந்தன.

இதைத் தொடா்ந்து, பயிா்சேதப் பாதிப்புக்குள்ளான பகுதிகளை உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் எல். ஆனந்தகிருஷ்ணன் புதன்கிழமை பாா்வையிட்டு, விவசாயிகளிடம் சேதங்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். மேலும் விவசாயிகளின் தேவைகளையும் அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது உளுந்தூா்பேட்டை வேளாண் உதவி இயக்குநா் கிருபாகரன், தோட்டக் கலை அலுவலா் ரஞ்சித், துணை வேளாண் அலுவலா் பழனிவேல், வருவாய் ஆய்வாளா் வனிதா, உதவி வேளாண் அலுவலா்கள் முருகன், மோகனப்பிரியா, தோட்டக்கலை உதவி அலுவலா் அறிவழகன், ஆனந்தன், ஆத்மா வட்டாரக் குழுத் தலைவா் அன்புமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.