எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜனவரி 2025, 7:31 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகிலுள்ள செங்காடு மாதாகோவில் தெருவைச் சோ்ந்த யோனாஸ் மகள் செல்வமரி (37). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுமாம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை செங்காடு கல்லறைத் தோட்ட குளத்துக்குச் சென்ற செல்வமரிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.