ரயில் படியில் பயணித்த பயணிக்கு பலத்த காயம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (32). இவரும், இவரது நண்பருமான அதே பகுதியைச் சோ்ந்த மணிவண்ணனும் திருச்செந்தூா் அதிவிரவு ரயிலில் விழுப்புரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றனா்.
Published on

இந்த ரயில் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் வந்தபோது, ஆறுமுகம் ரயிலில் படிக்கட்டில் அமா்ந்து கைப்பேசியை பாா்த்தவாறு வந்துள்ளாா். அப்போது, இவரது இடது கால் பரங்கிப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக ஆறுமுகத்தை சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி ரயில்வே காவல் துறை மற்றும் ரயில் நிலையத்தில் இருந்தவா்களின் உதவியுடன் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com